வெள்ளி, 28 செப்டம்பர், 2012

எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!

கனிகளில் பறித்த பின்னுமஜீவனுடன் இருப்பதஎலுமிச்சைதான் என்றும், அதமங்களகரமானது என்றும் ஜோதிரத்னா டாக்டர் ே.ி.வித்யாதரன் கூறுகிறார்!

நமது பண்பாட்டு ரீதியான பழக்வழக்கங்களில் உள்ள அர்த்தங்களை விவரித்வித்யாதரன், எலுமிச்சையின் குணங்களையும்,அதனைப் பயன்படுத்துவதில் உள்ரகசியங்களையும் விளக்கினார். 

"மஞ்சள் மங்களகரமான நிறம். திருமணமஉள்ளிட்ட சுபகாரியங்களுக்கு கொள்முதல் செய்வேண்டிய பொருட்களில் பட்டியலைத் தயாரிக்குமபொழுதும், புத்தாடை புனையும் பொழுதும்,நிச்சயதார்த்தம் செய்து எழுதும் ஓலையிலுமஒரு ஓரத்தில் அல்லது 4 ஓரத்திலும் மஞ்சளைததடவுகின்றோம். ஏனெனில் அது மங்களமானது. 

மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைததூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சஉள்ளது. வேதங்களில் அதர்வன வேதத்திலமுதலில் தேவதைகள், அதிதேவதைகளஆகியவற்றிற்கு பரிகாரப் பூஜைகள் செய்யுமபோது எலுமிச்சைப் பழத்தை பலியிடுவதவழக்கம். அதற்குக் காரணம், அந்தப் பழமஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. ஜீவனஉடையதைதானே பலியிட முடியும். 

webdunia photoFILE
அறிவியலபடி எலுமிச்சையிலசிட்ரிக் அமிலம் உள்ளது.இந்த சிட்ரிக் அமிலம் கிருமிநாசினி. பித்தம், கபமபோன்றவற்றையெல்லாமநீக்கக்கூடியது. இந்தபபழத்தில் இருந்து வீசக்கூடிவாசமே குதூகலமான சூழலஉருவாக்கவல்லது. 

எலுமிச்சைக் கன்று, மரம் ஒரு வீட்டிலஇருந்தால் வைத்தியரிடம் செல்ல வேண்டிதேவையில்லை, வாஸ்து பார்க்க வேண்டிஅவசியமும் இல்லை என்று முன்னோர்களகூறுவார்கள்.
குணமும், வீடகட்டியிருக்கும் மனை, வீடஅமைந்திருக்கும் மனமற்றும் கட்டட அமைப்புகளிலஉள்ள குறைகளை நீக்குமசக்தி எலுமிச்சைக்கஇருப்பதாசொல்லப்பட்டுள்ளது. 

கனிகளின் அரசன் என்று எலுமிச்சையசொல்லலாம். அதனால்தான் பிரபலமானவர்களைபபார்க்கும் போது மரியாதை நிமித்தமாக இந்தககனியைத் தருவது வழமை. 

நோயுற்றவர்களைக் காணச் செல்லும் போதும்,நோயுற்றவரிடம் காணச் செல்பவர்களஎலுமிச்சையை அளித்து நலம் விசாரிப்பதபழக்கத்தில் உள்ளது. இதில் இரண்டு முக்கிஅம்சங்கள் உள்ளன. 

நோய்வாய்பட்டவரிடம் இருந்து எதுவும் பார்க்வருபவரிடம் தொற்றாது. அதே நேரத்திலநோயுற்றவர் குணமாகவும் எலுமிச்சை உதவும்.எனவேதான், அந்தப் பழக்கமகடைபிடிக்கப்படுகிறது. 

எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிககனியுமாகும். அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரிநாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாகாவல் தெய்வம், எல்லைத் தெய்வம் சம்காதெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து,அந்த தெய்வங்கள் முன்பாக நின்று உறுதி மொழிஎடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களதபடைகளை வழி நடத்திச் செல்வார்கள். போரிலவாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டுமஎலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யுமவழக்கம் இருந்தது. 

பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றாலபாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளிஅம்மனுக்கு எலுமிச்சை மாலை சூடி வணங்கிவழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன்,பட்டீஸ்வரம் துர்கையம்மன் உள்ளிட்ட ல முக்கிஆலய வழிபாடுகளில் பிராதானமாஅமைந்துள்ளதைக் காணலாம்.

உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்

நமது நோக்கம்

இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம். 

அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும். 

உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.

நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை. 

இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை..என்பது வெளிப்படை. வார்த்தைகள், ஏன், எண்ணங்கள் கூட ஒரு பதிவை உண்டு பண்ணுவதற்கு மூன்றிலொரு பங்கு சக்தியை மட்டுமே அளிக்கின்றன, மனிதனே மற்ற இரண்டு பங்கை அளிக்கிறான். மனிதனின் கவரும் ஆற்றல் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற அந்தச் சக்தியே வெளியேறி உங்களிடம் பதிவை உண்டாக்குகிறது.

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

மனிதகுலத்தின் பெரிய தலைவர்களைக் கவனித்தால், அவர்களின் ஆளுமையே அவர்களைத் தலைவர்கள் ஆக்கியது என்பதையே எப்போதும் காண்போம். கடந்த காலத்தின் எல்லா நூலாசிரியர்களையும் சிந்தனையாளர்களையும் எண்ணிப் பார்ப்போம். 

உண்மையைச் சொல்வதானால், அப்படி எத்தனை எண்ணங்களைத்தான் அவர்கள் எண்ணிவிட்டார்கள்? கடந்த காலத்திலிருந்து மக்கள் குலத் தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நூல்கள் அனைத்தையும் பாருங்கள்.

அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் மதிப்பிடுங்கள். இன்று வரை உலகில் நினைக்கப்பட்டுள்ள, புதிய, சொந்தமான உண்மைக் கருத்துக்கள் கையளவு மட்டுமே. அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற எண்ணங்களை அவர்களுடைய நூல்களில் படியுங்கள். அந்த நூலாசிரியர்கள் நமக்கு மாபெரும் மக்களெனத் தோன்றுவதில்லை. எனினும் அவர்கள் தங்கள் காலங்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். 

அவர்களை அவ்வாறு ஆக்கியது எது?

அவர்கள் சிந்தித்த எண்ணங்களோ, அவர்கள் எழுதிய நூல்களோ, அவர்கள் செய்த சொற்பொழிவுகளோ மட்டும் அல்ல, அப்போது இருந்து, இப்போது மறைந்துவீட்ட வேறு ஏதே ஒன்று, அதாவத, அவர்களது ஆளுமை. நான் முன்பு கூறியது போல், அவர்களின் ஆளுமை மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் அறிவும் வார்த்தைகளும் ஒரு பங்கு. உண்மை மனிதன் அதாவது அவர்களின் ஆளுமையே நம்மை ஆக்கிரமிக்கிறது. நம் செயல்கள் விளைவுகள் மட்டுமே. மனிதன் உள்ளபோது செயல்கள் வந்தேயாக வேண்டும். விளைவு, காரணத்தைப் பின் தொடர்ந்தே தீரும்.

கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.

புதன், 26 செப்டம்பர், 2012

பராசர முனிவரும் வேத வியாசரும

 பராசர முனிவரும்  வேத வியாசரும
முன்னொரு காலத்தில் வஷிஷ்ட முனிவருடைய சிஷ்யனான கல்மஷாபாதன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவன் நிறைய நற் பண்புகள் மிக்கவன். பல் வேறு பூஜைகள், யாகங்கள் என அனைத்தையும் செய்து வந்தவன். அதே நேரத்தில் காடுகளில் சென்று விலங்குகளை வேட்டையாடுபவன். அப்படி ஒரு நாள் வேட்டைக்குச்
சென்று இருந்த பொழுது வழியிலே குறுகலான இடத்தைக் கடக்க வேண்டி இருந்தது . அந்த இடத்தில் சென்று கொண்டு இருந்த பொழுது எதிரே மற்றொரு அந்தணன் வந்து கொண்டு இருப்பதைக் கண்டான்.
இரு வரும் பக்கத்துப் பக்கத்தில் நடந்து சென்றால் அந்த இடத்தைக் கடக்க முடியாது. எவராவது ஒருவர் பாதை ஓரம் விலகி நின்றால் மட்டுமே மற்றவர் மேற்கொண்டு செல்ல இயலும். அந்த அந்தணர் வசிஷ்டமுனிவரின் புதல்வாரன சக்தி என்பவர். அவரைப்பற்றி அந்த கல்மஷாபாதன் அறிந்திருக்கவில்லை. ஆகவே அவரை ஒதுங்கி நிற்குமாறு மன்னன் கூற சக்தி யோதான் ஒருமா பெரும் முனிவரின் மகன்தானும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதினால் அந்தணர் என்ற செருக்கோடு அந்த மன்னரிடம் கூறினார்' மன்னனே சாஸ்திரங்களின் விதிப்படி இருவர் உள்ள இடத்தில் பிராமணனே முக்கியத்துவம் பெறுவான். ஆகவே முதலில் நான் போக நீ வழி விலகி நில் '
அதைக் கேட்ட கல்மஷாபாதன் கடும் கோபமுற்றான். மன்னன் என்னை இழிவாகப் பேசி விட்டான் ஒரு அந்தணன், என கடும் கோபமுற்று அவரை நன்கு அடித்து சாலை ஓரம் தள்ளி விட்டு மேலே செல்லத் துவங்கினான். சக்தி தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி துடித்தார். அவரும் கோபமுற்று அந்தமன்னன் மனிதகுல மாமிசம் தின்னும் ராக்ஷசனுடைய குணத்தைக் கொள்ளட்டும் என சாபமிட்டார். மன்னனும் அதன்படி மாமிசம் உண்ணும் குணம் கொண்டவனாக மாறி வசிஷ்டருடைய பிள்ளையான சக்தியையும் சேர்த்து அவருக்கிருந்த நுர்று பிள்ளைகளையும் கொன்றுத் தின்று விட்டான். அதைக் கேள்விப்பட்ட வசிஷ்டர் மிகவும் வருத்தம் அடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். முடியவில்லை. அதனால் அவர் சக்தியின் மனைவி அத்ரயன்த்தி என்பவளிடம் சென்று வசிக்கலானார்;.
அவளோ நிறைமாத கர்பிணி; .ஒருநாள் வீட்டில் எதோ மந்திர உச்சாடனை செய்யும் குரல் வந்ததைக் கேட்ட அவர் எங்கிருந்து அந்த ஒலி வருகின்றது என அவளைக் கேட்க அவளும் தன்னுடைய வ யிற்றில் உள்ள குழந்தைதான் வேதம் ஓதுகின்றது என்றாள். அவளுடைய கணவர் ஓதும் மந்திரங்களை வயிற்றில் இருந்த குழந்தை கற்றுக் கொண்டு அப்படி மந்திரம் ஓதியது. நாளடைவில் அவள் வயிற்றில் இருந்த குழந்தை வெளிவந்து நன்கு வளர்ந்தது. அதற்கு "பராசரா எனப் பெயரிட்டு வளர்த்தனர்".
தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட கதியை அறிந்து கொண்ட பராசரா அனைத்து இராட்ஷசர்களையும் அழிக்க சபதம் கொண்டு யாகம் ஒன்றைத் துவக்கினார். ராட்ஷசர்கள் அந்த யாககுண்டத்தில் விழுந்துகொண்டு மடிந்த வண்ணம் இருக்க வசிஷ்டர் வந்து அவரிடம் ஒரு ராக்ஷசன் செய்த தவறுக்கு எப்படி அனைத்து ராக்ஷசர்களும் பொறுப்பாக முடியும் என எடுத்துரைத்து நல்புத்தி கூற, பராசரரும் பிரும்மாவின் ஒரு மகனான புலஸ்த்யசி மகரிஷிக்கு அர்க்கயம் தந்து யாகத்தை நிறுத்தினார்.
பராசர முனி ஒரு முறை நதிக்கு சென்று மறு கரையை அடைய படகைத் தேடிய பொழுது ஒரு பெண் படகோட்டி மத்சய கங்கா என்பவளை பார்த்தார். அவள் மிகவும் அழகானவள், ஆனால் உடல் முழுதும் மீன் வாசனைக் கொண்டவள். அவள் படகில் ஏறி பயணம் செய்யும் பொழுது அவள் அழகில் மயங்கிஅவளை சல்லாபிக்க பராசரா முனிவர் ஆசை கொண்டார். அவள் தன் நிலையைக் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தம்மை எவரும் பார்த்து விடாமல் இருக்க பயங்கரப் பனி மூட்டததை தன் சக்தியினால் ஏற்படுத்தி விட்டு அவளுடன் அந்தப் படகிலேயே உறவு கொண்டு விட்டார்.
நதியில் இன்னொரு இடத்தில் சிறிய தீவு ஒன்றையும் தன்னுடைய சக்தியினால் படைத்து அவளை அங்கு தங்க வைத்து ஒரு குழந்தைப் பெறச் செய்தார். அழகான குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தையும் உடனடியாகப் பெரிய வனாயிற்று. கறுத்த நிறத்தில் இருந்ததினால் கிருஸ்னா (கறுப்பு) எனவும், தீவில் பிறந்தால் துவைப்பயான (தீவு) எனவும் வரும் பெயரில் கிருஸ்ன துவைப்பயான வியாசா எனப் பெயர் இட்டனர். அவளுடைய உடல் நல்ல மணம் பெற்றது. அப்படி ஒரு மீனவளுக்கும் பராசரா முனிவருக்கும் இடையிலான உறவிலே பிறந்தவரே வேதங்களைப் படைத்த மாபெரும் வேத வியாச முனிவர் ஆவார்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

இந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்?


                 19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்பான்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள்.
இது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள, உலகத்திலேயே இதுவரை நடந்திராத, ge பிரம்மாண்டமான ஊழலான 2 G ஸ்பெக்ட்ரம்
ஊழலை (176 கோடி 17600000000000) மறைப்பதற்காகவும், பாரத வரலாற்றிலேயே ஒரு கூட்டத்தொடர் முழுவதும் நடத்த முடியாமல் முடிந்த பார்லிமெண்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் சம்பவத்தை மக்களிடம் இருந்து மறைக்கவும், கார்கில் போர் வீரர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகளை மகாராஷ்ட்ர காங்கிரஸ் அμசு, அபேஸ் செய்த ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்ட ஊழலை மறைப்பதற்காகவும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலை மறைப்பதற்காகவும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் காங்கிμஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றியுள்ளார்கள்.
உலகின் சிறந்த பாரம்பரியமான இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவுபடுத்துவதற்காகவும், பாரத நாட்டிலே தேசபக்திக்காகவே வாழ்ந்து வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி அவதூறாகவும் பேசியுள்ளது வேதனையான விஷயமாகும்.
அரசியல்வாதிகள் தங்கள் நாற்காலியைக் காப்பற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பது மக்கள் அறிந்ததுதான். இருந்தாலும் இவ்வளவு கீழ்த்தரமான முறையில் காங்கிரஸ் மாநாட்டில் பேசியிருக்கக்கூடாது. இப்போது காங்கிரஸின் தலைவராக இருப்பவர் அந்நிய நாட்டுப் பெண்மணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எல்லாமதத்தையும் ஒன்றாக நினைக்கும் இந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்?
எல்லாக் கடவுளும் ஒன்றுதான் என்று கூறும் இந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்? வசுதைவ குடும்பகம், யாதும் ஊரே யாவரும் கேளிர், சர்வே பவந்து சுகின: என்று உலகத்தையே ஒரு குடும்பமாக நினைக்கும் இந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்.
இந்து ஒரு காலத்திலும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தைப்போல் ரத்தம் சிந்தி வளர்ந்த மதமல்ல இந்துமதம்! இந்து மதத்தைப் பரப்புவதற்காக யாரும் படையெடுத்ததும் இல்லை; பிரச்சாரம் செய்ததும் இல்லை. இப்படிப்பட்ட இந்துக்களைக் காவி பயங்கரவாதிகள் என்று கூறி புனிதமான துறவிகளின் சின்னமான காவியையும் இழிவுபடுத்தியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். இவர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.
மகாராஷ்ட்ர மாநிலத்தில், பயங்கரவாத தடுப்புப் பிரிவில் பணியாற்றிய ஹேமந்த் கர்கரே என்ற போலீஸ் அதிகாரியைப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொன்றது உலகறிந்த உண்மை. ஆனால் காங்கிரஸின் திக் விஜய் சிங், கர்கரே இறப்பதற்கு முன் இந்துத் தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்று எனக்கு போன் செய்தார் என்று இப்போது கூறுவது பொறுப்புள்ள மனிதனுக்கு அழகாகுமா?
ஹேமந்த் கர்கரேயின் மனைவி இதை மறுத்து எனது கணவர் படுகொலையை அμசியல் ஆக்காதீர்கள் என்று கூறுவது கவனிக்கத்தக்கது. முன்னாள் முதல்வர் இப்படிக் கூறுவது சட்டப்படி நியாயமா? நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தரும் இμண்டு செய்திகள் : 1) அமெரிக்கத் தூதரக அதிகாரி, அமெரிக்காவிற்கு அனுப்பிய செய்தியில் காங்கிரஸ், அரசியல் வெற்றிக்காக சாதி, மத உணர்வைத் தூண்ட முடிவெடுத்து காவிப் பயங்கμவாதம் என்று பேசுகிறது எனச் சொன்னது. 2) இராகுல் காந்தி அமெரிக்க அதிகாரிகளிடம் லஷ்கர்இதொய்பா, சிமி போன்ற பயங்கரவாத அமைப்புகளைப் போல இந்து பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து உள்ளது என்று கூறியது. மேலும் ஆர்.எஸ்.எஸ்., தடைசெய்யப்பட்ட சிமி போன்ற அமைப்பு என்று கூறியதாகும்.
இராகுல் காந்தி பாலுக்கும், விஷத்திற்கும் வித்தியாசம் தெரியாதவரை போல், சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக மிகக் கேவலமாக நடந்து கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்த நேரு கூட 1963ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ்.ஐப் பங்கு கொள்ளச் செய்தது இராகுலுக்குத் தெரியாதா? இந்திராகாந்தி ஆர்.எஸ்.எஸ்.ஐ ஒருபோதும் குறை கூறியதில்லை என்பது இராகுலுக்குத் தெரியாதா?
லட்சக்கணக்கான சேவைப் பணிகளை நாடு முழுவதும் செய்து வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்களை, கட்டுப்பாடு உள்ளவர்களை, நேர்மையானவர்களைக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
இந்து மதத்திற்கு இன்று ஒரு பாதுகாப்பு ஆர்.எஸ்.எஸ்.ம், அதன் சகோதர அமைப்புகளும்தான் ஆகும். சாதுக்களும், சன்னியாசிகளும், மடாதிபதிகளும், சான்றோர்களும் பாராட்டும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகளும், மாவோயிஸ்ட் களும் நம் நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தான நிலையில் இப்படியெல்லாம் பொறுப்பற்ற முறையில் பேசுவது மகாத்மா காந்தியின் பெயரில் இயங்கும் பாரம்பரியமான காங்கிரசுக்கு அழகல்ல.
பொறுப்பற்ற தேசபக்தியற்ற இந்த அரசியல்வாதிகளின் உண்மை சொரூபத்தை இந்துக்களின் ஒவ்வொரு வீட்டிற்கும், வீதி வீதியாகச் சென்று விளக்கிக் கூறி பாரத தேசத்தைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பணியில் இறங்குவோம்! வெற்றி பெறுவோம்! பாரத் மாதா கீ ஜெய்!

சனி, 22 செப்டம்பர், 2012

இறைவன் இருக்கும் இடம்

இறைவன் இருக்கும் இடம்
ஒரு ஆன்மிக பெரியவர் சுற்றுபயணம் செய்துகொண்டிருந்தபோது , ஒரு நாள் அந்தப் பெரியவர் அந்த தெரு வழியே நடந்து சென்று  கொண்டிருந்தார். ஏராளமான  அடியவர்கள்  எதிரே வந்து பெரியவரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிகொண்டிருந்தர்கள் .

பெரியவர் குழந்தைகளை பார்க்கிறார் , எல்லோரும் ஏழைக் குழந்தைகள், சட்டையெல்லாம் கிழிசல்கள் , ஆளுக்கு , இன்னும் சில குழந்தைகள் சட்டையே அணிந்திருக்க வில்லை . பரிதாபமான சூழ்நிலை , பார்த்தார் பெரியவவர் , மேற்கொண்டு நடக்காமல்  அங்கேயே  நின்றுவிட்டார் .

இதை கண்ட அவரது உதவியாளருக்கு ஒரே கவலை  . அடுத்த ஊருக்கு சரியான நேரத்தில்   போய் சேரவேண்டுமே   என்ற  கவலை. மெல்ல ஓடிப்போயி பெரியவரிடம் பணிவாக அதை நினைவூட எத்தனித்தார் . அதற்கு முன் பெரியவரே இவரோடு காதோடு காதாக ஏதோ சொல்லி அனுப்பினர் . உதவியாளர் உடனே அங்கிருந்து வேகமாக ஓடினர்.

அவர் போன பிறகு பெரியவரே அந்த குழந்தைகளை அருகில் அன்புடன் அழைத்து அவர்களைப் பாடசொல்லி  கேட்டு கொண்டிருந்தார் . மாலை மணி ஆறாகிவிட்டது . உதவியாளர் நிறைய துணி மூட்டைகளுடன் வந்தார் . எல்லாம் குழந்தைகளுக்கான சட்டை துணிகள் .

அவற்றை எல்லாம் எடுத்து ஒவ்வொரு  குழந்தைகளுக்கும் கொடுத்தார் பெரியவர் . பிள்ளைகள் மிகுந்த உற்சாகத்துடன் அதை அணிந்து கொண்டனர் . இதற்கிடையே  அந்த  பெரியவருடன்   வந்தவர்கள் தவிப்போடு காணப்பட்டனர்.

பக்கத்து ஊரு ஒன்றில் வழிபாடு செய்ய வேண்டியுள்ளது . உதவியாளர் மறுபடியும் பணிவோடு பெரியவரை அணுகி , "சீக்கிரம் புறப்பட்டால் நல்லது  பக்கத்து ஊரில் பூஜை இருக்கு" என்று இழுத்தார் .

பூஜையா  அதான்  இங்கேயே ஆகிவிட்டதே . இந்த ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் கொடுத்தோமோ அதுதான் பூஜை ! இது போதும்! .. என்று சொல்லி விட்டார் பெரியவர் .

கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு!


 கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு!

             கிருஷ்ண தேவராயரின் அரசவையில் விதூஷகனாக இருந்த தெனாலி ராமனின் திறமையையும், புத்திக்கூர்மையையும் மெச்சி, மன்னர் அவனை மிகவுமே மதித்தார். ஒருமுறை, அவனைப் பாராட்டி, தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பெரிய பானையைப் பரிசளித்தார். தெனாலி ராமன் மிகவும் மகிழ்ந்து, அந்தப் பானையைத் தூக்கினான். அதனுடைய
பாரத்தால், அது அவன் கைகளில் இருந்து நழுவிக் கீழே விழுந்து, பொற்காசுகள் சிதறின. தரையில் குனிந்து காசுகளைப் பொறுக்கத் தொடங்கினான். சபையிலிருந்த அனைவரும் அந்த வேடிக்கையான காட்சியைக் கண்டு பெரிதாகச் சிரித்தனர்.

சமயோசிதமாக, தனது தோளில் இருந்த மேலாடையில் சிலவும், தனது சட்டைப் பைகளில் சிலவுமாகப் போட்டு, பானையின் பாரத்தைக் குறைத்தான். மீதமிருந்தவற்றைப் பானையில் நிரப்பினான். மூளையை உபயோகித்து அவன் செய்த இந்தச் செயலைக் கண்ட ராஜா மேலும் மகிழ்ந்தார்.

மன்னரை வணங்கியபின், தெனாலி ராமன் திரும்பிச் செல்லும்போது, அவனது சட்டைப்பைகளில் இருந்து சில காசுகள் கீழே விழுந்தன. அவற்றையும் பொறுமையாகப் பொறுக்கத் துவங்கிய அவனது செயலைக் கண்ட சபையோர், 'இப்படி ஒரு காசு கூட விடாமல் இவ்வளவு கஞ்சத்தனமாகப் பொறுக்குகிறானே' எனத் தங்களுக்குள் ஏளனமாகப் பேசிக் கொண்டனர்.' இதைப் பார்த்த மன்னராலும், 'ஏனிப்படி பேராசை பிடித்து அலைகிறாய். அதுதான் வேண்டிய அளவுக்குப் பானையிலும், மேலாடையிலும், பைகளிலும் நிறையக் காசுகள் இருக்கின்றனவே' எனக் கேளாமல் இருக்க முடியவில்லை.

தெனாலி ராமன் அமைதியாக மன்னரைப் பார்த்து, ' மஹாராஜா, இந்தக் காசுகளிலெல்லாம் தங்களது திருவுருவச் சின்னம் பதித்திருக்கிறது. சபை கலைந்து செல்லும்போது, அதை எப்படி நான் மற்றவர் கால்களில் மிதிபடும்படி விட்டுச் செல்ல முடியும்? நீங்களே சொல்லுங்கள்!' என்றான். சமயோசிதமான இந்தப் பதிலைக் கேட்ட மன்னர், அவனது புத்திக்கூர்மையைப் பாராட்டி, இன்னுமொரு பானைத் தங்கக் காசுகளைக் கொடுத்து அனுப்பினார்.

நீதி: நிலைமையை அனுசரித்து, தக்க செயல் செய்வது மேலும் பயனளிக்கும்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை




ஒரு முனிவரின் மீது ஒருவர் எச்சிலை துப்பி விடுகிறார். கோபத்தில் அந்தமுனிவர் அவரை பார்த்து "அடேய் மூடனே! என்னை மதிக்காமல் என் மீது உமிழ்ந்து_விட்டாய். நீ பன்றியாக மாறி போவாய் என நான் உன்னை சபிக்கிறேன்" என சாபம் கொடுத்தார். சாபம்பெற்றவுடன் சந்நியாசியை உமிழ்ந்தவருக்கு ஒரு பயம் வந்தது.

அவர் தனது குழந்தைகளிடம் வந்தார். தனது மூத்த புதல்வனை பார்த்து சொன்னார், "மகனே! நான்செய்த ஒரு தவறால் பன்றியாக மாறும் சாபத்தை ஒருமுனிவர் எனக்கு தந்து விட்டார். பன்றியான பிறகு நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்கு தெரியலை. அதை நினைகும்போது பயமாக உள்ளது . அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நான் பன்றியாக மாறிய உடனே காட்டுக்கு சென்று விடுவேன். நான் எங்கேருந்தாலும் நீ தேடி வந்து என்னை கொன்று விடு! ஒரு பன்றியாக என்னால் வாழ முடியாது" என தெரிவித்தார் .

சிலநாட்களில் அவர் பன்றியாகி காட்டுக்குள் போய்விட்டார். தந்தையின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மகன் தந்தையை தேடி காட்டுக்குள் குளம் குட்டைகளிலேல்லாம் தேடி அலைகிறான் . எங்கேயாவது பன்றி கூட்டங்களைப் பார்த்து விட்டால் உடனே அதன் அருகிலேபோய் "அப்பா" என அழைப்பான். அவைகள் மிரண்டு ஓடி விடும். இவனுக்கு தன் தந்தையை மனித ரூபத்தில் தெரியுமேதவிர‌ பன்றி ரூபத்தில் தெரியாதே! எனவே தேடிக்கொண்டே இருந்தான்.

இப்படியாக இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. கடைசியாக ஒருகுளத்தங்கரை அருகிலே போய் நின்று அப்பா என கூப்பிட்டான். உடனே ஒருபன்றி வந்து நின்றது. அதன் பின்னாலேயே இன்னொரு பன்றியும் ஓடி வந்தது. குட்டிகளும் ஓடிவந்தன . பன்றி ரூபத்தில் இருந்த_தந்தை கேட்டார் "மகனே வந்து விட்டாயா?!" , "ஆமாம் தந்தையே, நீங்கள் பன்றியான உடனேயே உங்களை கொன்று விட சொன்னீர்களே! அதனால்தான் காடெல்லாம்தேடி உங்களை இப் பொழுது கண்டு பிடித்திருக்கிறேன். உங்களது கோரிக்கையை நிறைவேற்றட்டுமா?" என கேட்டான் மகன்.

அதற்கு தந்தை_அவசரமாக "வேண்டாம் மகனே வேண்டாம்! என்னை அவசரப்பட்டு கொன்றுவிடதே . நான் இங்கேயே_வாழ்ந்து இந்த இடத்திற்கேற்ப்ப ஒருதுணையையும் சேர்த்து 3 குட்டிகளையும் பெற்றாகிவிட்டது. இப்பொழுது இதுவே_எனக்கு போதுமானதாகி விட்டது. எனவேஇங்கேயே என்னை விட்டு விடு" என கேட்டுக்கொண்டார் .

இந்தக்கதை மூலமாக உபநிஷத்தில் சொல்லபடும் தர்மம் என்னவெனில் எங்கேபோய் இருக்கிறாயோ அதுவே போதுமானது என இருக்கும் இடத்திற்க் கேற்ப்ப வாழப்பழகி கொள்வது பலவிதமான துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் என்பதாகும்.

"ரோம் நாட்டில் வாழும் போது ரோமானியனாக இரு" என ஆங்கிலத்தில் ஒருவாசகம் உண்டு . இதுதான் அது. சிலருக்கு தலையனை_இல்லாமல் தூக்கம்வராது. யார் வீட்டுக்கு போனாலும் படுக்கும்போது நல்ல தலையனைவேண்டும் என பிடிவாதம் பிடிப்பார்கள். உறவு கார‌ர்களிடம் ஒரு தலையனைக்காக முகம்சுளித்து சலித்து கொள்வார்கள். இப்படி இருக்கும் இடத்திற்க்கு தகுந்தார்போல் சின்ன சின்ன விஷயத்தைக்கூட மாற்றிக்கொள்ள மனம் இல்லாதவர்கள் யாருடனும் சகஜமாக ஒத்துப்போக மாட்டார்கள்.

இன்ன சுவையில்தான் சாப்பிடுவேன், இன்ன மாதிரி இடத்தில்தான் தங்குவேன் , இன்ன மாதிரி மனிதர்களை பார்த்தால்தான் சிரிப்பேன் என சின்ன சின்ன விஷயங்களில் பலவிதமாக மனிதர்கள் தங்களை தாங்களே ஒருவிலங்கில் பினைத்து கொள்கிறார்கள். இவர்கள் தங்கள்_வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களாக இருப்பார்கள்.

இதுபோன்ற மன விலங்குகளை உடைத்து எரிந்துவிட்டு மிகவும் திறந்தமனதுடன் வாழ்பவர்கள் எப்போதும் நிம்மதியாக இருப்பார்கள். இதுவே உபநிஷத்தில் அழகான_கதையின் மூலம் இந்துதர்மத்தில் விளக்கப்படுகிறது.

நம்மவர்கள் இந்துதர்மத்தை கேலி செய்தும் பழித்தும் பேசி வரும் தருணத்தில்  இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை அமெரிக்காபோன்ற நாடுகளில் வெள்ளையர்கள் இந்து தர்மத்தை பற்றி நிறைய ஆராய்ச்சிசெய்து பல புத்தகங்களை வெளியிட்டுகிறார்கள். அவர்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எங்கள் நாட்டிலே மதரீதியாக சொல்லி கொடுக்கப்படாத சில‌ விஷயங்கள் இந்துதர்மத்திலே மிக அழகாகவும் மிக ஆழமாகவும் மனதில்பதியும் வகையில் சொல்லி கொடுக்கப்படுகிறது.

அதாவது, மன கட்டுப்பாட்டுடன் வாழ்வது மற்றும் நிம்மதி என ஒருவிஷயத்தை இந்துதர்மம் அழகாக போதிக்கிறது. எப்படி வேண்டுமானாலு ம் வாழலாம் என எங்கள் கலாச்சாரத்தினால் இங்கே ஒவ்வொரு தனிமனிதரும் சுயநிம்மதி என்பதை வாழ்க்கையில் உணராமலே மரித்துப்போய் விடுகிறார்கள். இந்துவாக வாழும் ஒவ்வொருவரும் நிம்மதியாக_வாழ்வது என்பதை மிகஅருமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.

இப்படி நமது மனதை மிக எளிமையாக பக்குவபடுத்த இந்து தர்மத்தை விட வெறெதுவும் இருக்கமுடியாது. மனிதன் ஒருசாபத்தால் பன்றியாக முடியுமா என கருப்புச் சட்டை முட்டாளை போல் கேள்வி கேட்காமல் இந்தக்கதை சொல்லி கொடுக்கும் ஆழ்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ளுவதே உண்மையான பகுத்தறிவாகும். வளரும் குழந்தைகளுக்கு இதைபோன்ற கதைகளை சொல்லிக்கொடுத்தால் அவர்கள் எதிர் காலத்தில் மிக பக்குவமான மனிதர்களாக வளர்வார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதனாலேயே சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

அறுகம்புல்லின் மருத்துவ குணம்





அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் சித்தர்கள் அறுகு என பெயரிட்டுள்ளனர்.இடகலை, பிங்கலை நமது தச நாடிகளில் பிரதானமானது, அறுகம்புல் இவை இரண்டையும் மற்றும் இவை சார்ந்த 72000 நரம்புகளையும் இயக்கவல்லது.அறுகம்புல்லின் ஊறல் நீரையும் , பாளையும் சேர்த்து உட்கொள்ள  கண் புகைச்சல், கண்நோய், குருதியழல், தலை நோய்  இவை நீங்கும் .அறுகம்புல்லுடன் சிறிது அலவு மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வந்தால் , படர்தாமரை சொறி,சிரஙகு நுண்புழு ஒழியும்.அறுகம்கட்டை  கணு நீக்கி ஒரு பிடியெடுத்து அதனுடன் பதிமுன்று  மிளகு சேர்த்து இடித்து அரைப்படி நீர்விட்டு அரை அழக்காக சுண்டும் படி கஷாயம் இட்டு சாப்பிடவும். இப்படி காலை, மாலை இரண்டு வேளையும் பாத்து நாள் சாப்பிட்டால் மேகசுரம் , உடம்பு சூடு முதலியன நீங்கும்

.மாட்டு சாணியை உருண்டையா பிடித்து அதற்கு பொட்டு வைத்து அதன் தலையில்  அருகம்புல்லைச்செருகி வைத்தால் சில நாள் சென்று சாணி  சுக்கலாக காய்ந்து இருக்கும். இதற்கு காரணம்  அறுகம்புல்லின் வேர் பாகத்தில் இருக்கும் கிருமி நாசிணி சாணியில் இருக்கும் அசுத்த கிருமிகளை வேதியல் மாற்றத்தால் நீக்கி சுத்தப்படுத்துகிறதுஇதையே மற்றொரு சாணியில் அறுகம்புல் செருகாமல் வைத்தால் அவற்றில் புழுபுழுத்து உதிர்ந்து காணப்படும். இவற்றில் இருந்து அறுகம்புல்லுக்கு எந்த அளவிற்கு மருத்துவ குணம் உண்டு என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

அறுகம்புல்லின் கணு பாகம் நச்சு தன்மையுடையது எனவே இதை நீக்கிப் பயன படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதியாகும்.

செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த வழிமுறை



செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத இடங்களில் செல்போனிலிருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியாகும். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெளியில் சென்றோ அல்லது ஜன்னல்களுக்கு அருகில் நின்று கொண்டோ பேச வேண்டும்.


* லிப்டுகளில் செல்லும்போதும், கட்டிடங்களின் அடித்தளங்களில் நிற்கும்போதும் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

* கூடுமானவரை அலுவலகங்களிலும், வீடுகளிலும் லேண்ட் லைனை பயன்படுத்துவது நல்லது.

* குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது.

தெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை


தெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை

தமிழ் எண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞாபகத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் தமிழ் வருடங்களும். இது எந்த வருடம் என்று நாட்காட்டியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை.

நமது வாரிசுகளிடம் கேட்டால் அவ்வளவு தான். தமிழில் மொத்தம் 60 வருடங்கள் இருக்ககின்றன. இவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். ஒரு சஷ்டியாகக் கருதப்படும் 60 தமிழ் வருடங்களின் பெயர்கள்

இதோ -


பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரnஜhத்பதி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்;ய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்;முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பிங்கள, காளயுத்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய


செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கூடாநட்பு கோடி நஷ்டம் !!



கூடாநட்பு கோடி நஷ்டம் !! ஓர் காட்டுக்குள் அழகிய குளம் ஒன்று இருந்தது. அதில் தவளைகள் பல வாழ்ந்து வந்தன. காட்டிலிருந்த அனைத்து மிருகங்களுடனும் நட்பாகப் பழகியதால், எந்தவிதக் கவலையுமில்லாமல் அவை அந்தக் குளத்தில் நீந்தி மகிழ்ந்தன. ராஜா தவளையும், ராணி தவளையும் கூட இவர்களைக் காப்பதற்கென ஏதும் செய்ய வேண்டியதில்லாது இருந்ததால், அவைகளும் மகிழ்வாகவே காலம் தள்ளின.

ஒருநாள் அந்த வழியே சென்றுகொண்டிருந்த வஞ்சகக் குணம் கொண்ட ஒரு வயதான பாம்பு இந்தத் தவளைகள் இப்படி ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருப்பதைக் கவனித்தது.

'ஆஹா! என்ன ஒரு விருந்து எனக்கு? இந்தத் தவளைகள் அனைத்தையுமே ஒரே வாயில் போட்டு விழுங்கிவிடலாமே! ஆனால், என்ன செய்வது? எனக்கோ வயதாகி விட்டது. இந்தத் தவளைகளை வஞ்சகமாகத்தான் கவர வேண்டும்' என அந்தப் பாம்பு தனக்குள் பேசிக்கொண்டது.

என்ன செய்யலாம் என முடிவெடுத்த அந்த கிழப் பாம்பு, சத்தமில்லாமல் நகர்ந்து, அந்தக் குளத்தருகே சென்று, இறந்துவிட்டதுபோல ஒரு மரத்தடியில் சுருண்டது.

விளையாட்டுத்தனமும், குறும்புத்தனமும் கொண்ட இரு இளவரசுத் தவளைகள் இந்தப் பாம்பு இப்படி கிடப்பதைப் பார்த்ததும், அதனருகில் சென்று, பாம்புக்கு என்ன நேர்ந்தது எனப் பார்க்கத் தலைப்பட்டன.மெதுவாகச் சென்று அந்தப் பாம்பைத் தொட்டன. லேசாக அசைந்துகொடுத்தது அந்தப் பாம்பு. உடனே இரு தவளைகளும் சட்டென நகர்ந்தன. ஆனால், உடனேயே மீண்டும் அந்தப் பாம்பு அசைவற்றுக் கிடந்தது.

'நாம் இந்தப் பாம்பை இதற்குமுன் இங்கே பார்த்ததே இல்லையே' என ஒரு தவளை சொன்னது.

'எங்கிருந்தோ வந்து இங்கே இறந்துவிட்டதால்தான், இப்படி அசைவற்றுக் கிடக்கிறது போலும்' என இன்னொரு தவளை பதில் சொன்னது.

இதைக் கேட்டதும் அந்த வஞ்சகப் பாம்பு, தனது கண்களை லேசாகத் திறந்து, மெல்லிய குரலில், ' என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். வயதான என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. மேலும், நான் ஒரு சாபத்துக்கு ஆளாகியிருப்பதால், நீங்கள் என் மீது ஏறிக் கொள்ளலாம். நான் உங்களுக்கு வாகனமாக இருப்பேன். இன்று முதல் நீங்கள் எங்கு செல்ல விரும்பினாலும் நான் உங்களைச் சுமந்து செல்வேன்' என தீனமாகச் சொன்னது.

முதலில் கொஞ்சம் சந்தேகப்பட்டாலும், அவ்விரு தவளைகளும் அந்தப் பாம்பின் மீது ஏறிக்கொண்டு, ஒரு சவாரி செய்து திரும்பின.

இதற்குள்ளாக தவளைராஜா, ' குழந்தைகளே, எங்கே போனீர்கள்? அரண்மனைக்கு சீக்கிரம் வந்து சேருங்கள்' என அவர்களை அழைத்தது.

இதைக் கேட்டதும் அந்த இரு தவளைகளும் வேகமாக திரும்பிச் சென்றன. வயதான காலத்தில் இப்படி சவாரி செய்ய நேர்ந்ததால், கிழப் பாம்புக்கு மூச்சு வாங்கியது.

அரண்மனைக்குத் திரும்பிய இளவரசர்கள் இரண்டும், தவளைராணியிடம் நிகழ்ந்ததைப் பற்றி மூச்சு விடாமல் கூறின. அவர்கள் சொன்னதைக் கேட்டு திகிலடைந்த ராணித்தவளை, இனிமேல் அப்படி செய்யாதீர்கள் என அறிவுறுத்தியது. ராஜாவிடம் இந்த விஷயத்தை ராணி கூறியதும், அந்தப் பாம்பைக் காட்டும்படி தவளைராஜா கேட்டது.

இளவரசுத் தவளைகள் இரண்டும் பாம்பிடம் சென்று, மீண்டும் ஒருமுறை தங்களைச் சுமந்து காட்டும்படி வேண்டின. அதற்குச் சம்மதித்த வஞ்சகப் பாம்பு அவர்களை மட்டுமில்லாமல், தவளைராஜாவையும் சுமந்து காட்டியது. இதைப் பார்த்த குளத்திலிருந்த மற்ற தவளைகள் எல்லாம் இந்த விஷப் பரிட்சையைத் தவிர்க்குமாறு ராஜாவை வேண்டின. 'பாம்பு எப்போதுமே நமக்கு நட்பாக இருக்க முடியாது. ஒருநாள் இல்லாவிடில் ஒருநாள் நம்மையெல்லாம் அது தின்றுவிடும்' என எச்சரித்தன. ஆனால், அதைக் கேட்ட தவளைராணியோ, 'உங்களையெல்லாம் பாம்பு சவாரிக்கு கூட்டிச் செல்லாததால், பொறாமையினால் இப்படி பேசுகிறீர்கள்' என அலட்சியம் செய்தது.

அன்று முதல், தினமும் இந்தப் பாம்பு சவாரி ஒரு வாடிக்கையாகிப் போனது.

ஒருநாள், அந்தப் பாம்பு மிகவும் தளர்வுற்றதுபோல் காணப்பட்டது. அதைப் பார்த்த தவளைராஜா என்ன விஷயமெனக் கேட்டது.

'இத்தனை நாட்களாக நான் உங்களைச் சுமந்து செல்கிறேன். ஆனால், தின்பதற்குத்தான் ஒன்றுமே கிடைக்கவில்லை. அதனாலேயே நான் மிகவும் களைப்பாகி விட்டேன்' என் பாம்பு பதில் சொன்னது.

'அப்படியா? சாப்பிட உனக்கு என்ன வேண்டும் சொல். தருகிறேன்' என ராஜா அன்புடன் கேட்டது.

'உங்களது ராஜ்ஜியத்தில்தான் கணக்கற்ற தவளைகள் இருக்கின்றனவே. அவற்றுள் ஒருநாளைக்கு ஒன்று கிடைத்தால்கூடப் போதும்' எனப் பணிவாகப் பாம்பு சொன்னது.

இதைக் கேட்ட தவளைராஜா ஒரு கணம் திகைத்துப் போனது. ஆனாலும், தனக்குக் கீழே எத்தனையோ தவளைகள் இருப்பதாலும், ஒரு ஆபத்து என்றால் அவை குளத்தில் குதித்துவிடும் என நினைத்தும், அதற்கு சம்மதித்தது. இப்படியாக, தினம் ஒரு தவளை பாம்புக்குக் கிடைக்கத் தொடங்கியது. விரைவிலேயே தனது பலத்தைத் திரும்பப்பெற்ற அந்த நயவஞ்சகப் பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குளத்திலிருந்த அத்தனைத் தவளைகளையும் விழுங்கிவிட்டது.

வேறு தவளைகள் குளத்தில் இல்லாததாலும், தினம் தவளைகளைத் தின்று பழகிவிட்டதாலும் தைரியமடைந்த பாம்பு, இளவரசுத் தவளைகளையும், தவளை ராஜாவையும் தின்று, இறுதியில் தவளைராணியையும் விட்டுவைக்காமல் விழுங்கிவிட்டது.

இப்போது அந்தக் குளத்தில் தவளைகளே இல்லை. குளத்திலிருந்து வந்துகொண்டிருந்த தவளைகளின் ஆரவாரக் கூச்சல்களும் இல்லை!

"கூடாநட்பு கோடி நஷ்டம்" என்பது இக்கதையின் நீதி!

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல். [திருக்குறள் 630]

[பகைவர் நட்பாகப் பழகுவதுபோல் காலம் வரும்போது, அவரோடு முகத்தளவில் நட்புச்செய்து, மனத்தால் அந்த நட்பை நீக்கியிருத்தல் வேண்டும்.]