திருவட்டார் அருகே கோயில் சிலை திருட்டு
திருவட்டார் : திருவட்டார் அருகே கோயில் சிலை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவட்டார் அருகே ஆற்றூர் புதியசந்தையில் தர்மசாஸ்தா கோயில் உள்ளது. இக்கோயிலின் ஒருபுறம் நாகர், நாகர் அம்மன், நாகர்கன்னி சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜைகள் நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி நாராயணன் கோயிலில் பூஜை முடித்து சென்றுள்ளார்.
நேற்று காலை வந்து பார்த்த போது நாகர்கன்னி சிலை அருகில் உள்ள ஓடையில் வீசப்பட்டிருந்தது. நாகர் அம்மன் சிலையை காணவில்லை. இது குறித்து கோயில் நிர்வாகம் மற்றும் பூஜாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயில் சிலை திருடப்பட்டுள்ளதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கோயில் நிர்வாக தலைவர் பால்ரெத்தினம் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். இதில் ஒரு சிலை ஓடையில் வீசப்பட்டிருந்தது. ஒரு சிலையை மர்மநபர்கள் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதுபோல் கோயில்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் பக்தர்கள் இடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு